Thursday, March 12, 2026 10:42 am
பேருவளை, காலி வீதியில் தனியார் பேருந்திலிருந்து விழுந்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பேருவளையில் வசிக்கும் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் மஸ்ஸல சந்தியில் ஏறி, சுமார் 100 மீட்டர் தூரம் பயணித்தபோது, அவர் தொலைபேசியை எடுத்துள்ளார். அதன்போது நிலைதடுமாறி பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்ட சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

