Tuesday, February 3, 2026 10:19 am
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
சிரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை கடந்த 27 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கு முன்னிலையாக இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் தமது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

