Thursday, December 11, 2025 7:15 pm
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் மருத்துவனை ஒன்றில் மருத்துவ சத்திரசிகிச்சை பெற்றுள்ளார். சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் விட்டில் அவர் தங்கியிருப்பதாகவும், மருத்துவ சிகிச்சையின் முன்னேற்றத்தை பொறுத்து அவர் அம்பாந்தோட்டைக்குச் செல்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சையின் பின்னர் மகிந்த ராஜபக்ச தற்போது நலமாக இருப்பதாகவும், ஆனாலும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் எவரும் அவரை பார்வையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சைக்காக மகிந்த ராஜபக்ச தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

