Tuesday, February 3, 2026 2:28 pm
இன்று செவ்வாய்கிழமை காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிரிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதும் தம்மால் வருகை தர முடியாது எனவும், இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சுமார் 4 மணிநேர விசாரணைகளுக்க பின்னர் அவர் வெளியேறியுள்ளார்.

