Wednesday, November 19, 2025 11:40 am
அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பிறந்தநாளை முன்னிட்டு, கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த பேரணியில் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

