Friday, January 9, 2026 3:13 pm
இலங்கையில் வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
இது வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை சனிக்கிழமை (10) மாலை யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் போது வலுக்குறைந்த நிலையிலே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மலையக மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால் மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் எதிர்வரும் 11.01.2026 வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

