Saturday, December 20, 2025 4:36 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும் , நாடாளுமன்ற ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி , நாடாளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 , 23 , 24 மற்றும் 26 விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை வழமைக்கு கொண்டுவருவதற்கான குறைநிரப்பு மதிப்பீடு கடந்த வியாழக்கிழமை (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நேற்றைய தினம் இந்த குறைநிரப்பு மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டது.
அதற்கமைவாக , ஜனவரி 06ம் திகதி காலை 9.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் , நாடாளுமன்ற ஊழியர்கள் மீண்டும் டிசம்பர் 29ம் திகதி திங்கட்கிழமை தமது கடமைகளுக்கு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

