Thursday, March 19, 2026 12:48 pm
எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை அல்லது முறைப்பாடுகளை வழங்குவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
0112106767, 0117296130 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு முறைகேடுகள் தொடர்பான தகவல்களை அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

