Tuesday, February 17, 2026 3:55 pm
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்களை நாளை வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இரு சகோதரர்கள் உள்ளிட்ட நால்வர், இந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குறித்த இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

