Monday, February 16, 2026 2:00 pm
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய இக்கொலைச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று மாலை நடைபெற்ற விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் நான்கு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

