Thursday, October 23, 2025 4:16 pm
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளரான “மிதிகம லசா” என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகரவின் உடல் அவரது வீட்டுக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் நேற்று காலை தவிசாளர் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, அலுவலகத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிசூடு நடத்தியதில் படுகாயமடைந்த லசந்த விக்ரமசேகர மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.