Tuesday, January 6, 2026 4:22 pm
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ரூ. 500 மில்லியன் மதிப்புள்ள பாரியளவான போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்தவர்கள் “கிரீன் சேனல்” வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர் . அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர். மும்பையில் உள்ள ஒரு தொலைபேசி பரிமாற்றத்தில் பணிபுரியும் 27 வயதுடைய நபர் ஒருவரும், மற்ற இரண்டு பெண்கள் 25 மற்றும் 31 வயதுடைய மும்பையில் உள்ள பாடசாலை ஆசிரியைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளின் ஆரம்ப விசாரணையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பேங்கொக்கிக்கு பயணம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
03 பயணபொதிகளில் 100 கிராமுக்கு சற்று அதிகமான எடையுள்ள 48 பொட்டலங்களில் 50 கிலோகிராம் “குஷ்” போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவாகும். இதற்கு முன்னர் 2025 ஆண்டு வெசாக் போயா நாளில் பிரிட்டிஷ் விமான பணிப்பெண் ஒருவர் கொண்டு வந்த 46 கிலோகிராம் “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

