Thursday, December 4, 2025 2:29 pm
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தொடர்ந்து நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ,கண்டி,கேகாலை,மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாவட்டங்களிலும் உள்ள 40 மாவட்ட செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி டிசம்பர் 06 – 09 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் தென் மாகாணத்தை பாதிக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர் , டிசம்பர் 09-13 வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
அதன் பின்னர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் டிசம்பர் 16-19 திகதிகளில் மீண்டும் மழை பெய்யும் என்றும் மத்திய மாகாணத்தை மீண்டும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப் பகுதிகளில் வாழும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

