Saturday, December 27, 2025 12:34 pm
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து 1200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் மட்டும் 363 பகுதிகள் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மண்ணரிப்பைத் தடுக்க தாழ்வுநிலப் பகுதிகளில் காணப்படும் வீடுகளை அண்டிய பிரதேசங்களுக்கு அருகாமையில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

