Wednesday, October 29, 2025 11:33 am
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு நைட்ஹுட் (Knighthood) பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு, விண்ட்சர் அரண்மனையில் (Windsor Castle) இளவரசி ரோயலால் இந்த பட்டம் வழங்கப்பட்டது. 43 வயதான அவர், 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
ஆண்டர்சன் 2024 யூலை மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், இருப்பினும் அவர் தனது சொந்த அணியான லான்காஷைருக்காக (Lancashire) தொடர்ந்து விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

