Wednesday, April 1, 2026 2:12 pm
2025ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த மாணவன் 2.9400 Z-புள்ளி பெற்று அகில இலங்கை ரீதியாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தனது வரலாற்றுச் சாதனை குறித்து இன்று ஊடகங்களுக்கு குறித்த மாணவன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

