Friday, February 6, 2026 4:06 pm
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சமித்ரி ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

