Monday, January 12, 2026 2:47 pm
கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டெல்லியிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
அதன்படி இன்று காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னிலையாவதற்காக தனி விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டு சென்றார்.
தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி பொலிஸாரிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு டெல்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்ல உள்ள அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

