Wednesday, January 7, 2026 10:46 am
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நான்கு வருடங்களாக பணியாற்றி வருகின்ற ஜூலி சங் எதிர்வரும் 16ம் திகதி பிரியாவிடை பெறப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கான தூதுவராகப் பொறுப்பேற்ற அவர் அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவதிலும், அவற்றின் நலன்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
மேலும் சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கை பல்வேறு சந்தர்ப்பங்களில் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருந்த நிலையில் அவற்றை சாதுர்யமாக சமாளித்த வல்லமை கொண்டவர். இவைதவிர அரசியல் மாற்றங்களின் போதும் அளப்பரிய பணிகளை ஜூலி சங் ஆற்றியுள்ளார்.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் பல மைல்கற்களை அவர் தனது பணிக் காலத்தில் எட்டியுள்ளமை அளப்பரிய ஒன்றாகும்.

