Wednesday, December 10, 2025 1:58 pm
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தீவு மக்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அவுஸ்திரேலியாவின் சர்வதேசக் கல்வி , குடியுரிமை , சுங்கம் மற்றும் பல்வகை கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தக் கடினமான காலகட்டத்தில் ஜூலியன் ஹில்லின் வருகை அவுஸ்திரேலியாவுக்கும் , இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலியுறுத்துகிறது.
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய துணை அமைச்சர் ஜூலியன் ஹில் , நிவாரண பங்காளர்களை இன்று சந்தித்துள்ளார்.
மேலும் , இவர் பெண்கள் மற்றும் இளம் பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாப்புலேஷன் ஃபண்ட் (UNFPA) இலங்கை ஊழியர்களை சந்தித்து உரையாடினார்.
பிராந்திய இருப்பு முன்னெடுப்புத் திட்டம் (Regional Prepositioning Initiative) ஐக்கிய நாடுகள் சபையின் பாப்புலேஷன் ஃபண்ட் (UNFPA) உடனான அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான கூட்டாண்மை எடுத்துக்காட்டப்படுகிறது.
ஜூலியன் ஹில்லின் விஜயம் , ஒரு நல்லிணக்கப் பாதையை மதிப்பிடுவதற்கும் , அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதற்கும் மற்றும் இலங்கை வாழ் மக்களுக்கு அமைதியான சகவாழ்வுக்கான நம்பிக்கையை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம்.

