Sunday, November 2, 2025 10:15 am
நீதித்துறை சேவை ஆணைய அதிகாரிகளுக்கு எதிராக கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக நீதிபதிகள் உட்பட்ட 20 அதிகாரிகள் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதிகள் , நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட்ட நீதித்துறை சேவை ஆணையகத்தின்அதிகாரிகள் பணிகளிலிருந்து விலத்திக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் மற்றவர்கள் பணிநீக்கம் அல்லது கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மேல் நீதிமன்றத்தில் தற்போது பத்து வெற்றிடங்கள் உள்ளன, அதே நேரத்தில் நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 60 வெற்றிடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

