17 முறை உலக சாம்பியனான பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா ஓய்வு பெறவுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜோன் சீனா ஒரு மல்யுத்த வீரராக மட்டுமல்லாமல் ஒரு ஹொலிவூட் நட்சத்திரமாகவும் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் டிசம்பர் 13ம் திகதியோடு ஜோன் சீனா ஓய்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வோஷிங்டன் நகரில் அமெரிக்க நேரப்படி டிசம்பர் 13ம் திகதி இரவு 7.30 மணியளவில் ஜோன் சீனாவின் கடைசிப் போட்டி நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.