Tuesday, January 27, 2026 11:16 am
தளபதி விஜய் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தணிக்கை குழு அதிகாரிகள் சான்றிதழை வழங்காததால் படம்வெளியாகவில்லை. இதனையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது.
கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது.
குறித்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து அதன் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
நீதிபதிகள் வழங்கியிருக்கும் தீர்ப்பில் “வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மத பிரச்னையை ஏற்படுத்தும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருக்கின்றன. ஜனநாயகன் வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க வேண்டும். ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்கிறோம். தணிக்கை வாரியத்துக்கு போதுமான கால அவகாசம் வழங்கவில்லை என்பதால் தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறர்கள்.
இதன் காரணமாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

