Thursday, January 8, 2026 10:54 am
ஜனவரி 9ம் திகதி வெளியாகவிருந்த இளையதளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படவெளியீடு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையிடப்படவிருந்த இத் திரைப்படமானது சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து தயாரிப்பு நிறுவனம் வருத்தப்படுவதாகவும் , திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் அறிவிப்பானது படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் , ரசிகர்கள் காட்டி வரும் அதீத ஆர்வத்தையும் உணர்வுகளையும் மதிப்பதாகவும், தொடர்ந்து பொறுமையுடன் ஆதரவு வழங்குமாறும் படக்குழுவினர் ரசிகர்களை கேட்டுக்கொள்கின்றனர்.

