Tuesday, March 24, 2026 4:19 pm
யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை வலிகாமம் தெற்கு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் திராகராசா பிரகாஸ் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பிரதேச சபை செயலாளர், உடுவில் கமநல சேவைகள் நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

