Friday, January 2, 2026 10:07 am
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகாமையிலுள்ள கொடிக்கம்பத்துக்கு அருகில் இடம்பெற்ற அரச சேவையின் முதல் நாள் உறுதியுரையேற்பு நிகழ்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 2025 ஆம் ஆண்டு 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்த விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களும், கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுமாக 43 பேர் பதக்கம் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


