Wednesday, January 21, 2026 4:22 pm
வணிகம், புத்தாக்கம், மற்றும் நிலைபேற்றியலை வலுப்படுத்துகின்ற 16 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பன்முக வர்த்தகக் கண்காட்சியான யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிகழ்வானது தொடர்ந்து 16 தடவையாக 2026 ஜனவரி 23 முதல் 25 வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் கண்காட்சி மற்றும் வர்த்தக நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் முன்னிலை வகிக்கும் Lanka Exhibition & Conference Services (LECS) ன் ஏற்பாட்டிலும், யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள JITE நாட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது.
பலவகைப்பட்ட கைத்தொழில் துறைகள் மத்தியில் விரிவான தயாரிப்புக்கள் சேவைகள், மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 400 இற்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்களை இக்கண்காட்சி நிகழ்வு கொண்டிருக்கும்.

