Friday, December 26, 2025 1:13 pm
2026 ஆம் ஆண்டில், குரு மூன்று முறை மூன்று வெவ்வேறு ராசிகளில் பெயர்ச்சி அடையப் போகிறார். ஆண்டின் தொடக்கத்தில், மிதுன ராசியை நோக்கிப் பயணித்து , ஜூன் 2, 2026 அன்று, கடக ராசிக்குள் நுழைவார். அக்டோபர் 31, 2026 அன்று, சிம்ம ராசிக்குள் நுழைவார்.
ஜோதிட மரபில் குரு பகவான் மிகவும் சுப கிரகமாகக் கருதப்படுகிறார். அவரது இயக்கம் தனிநபர்களின் வாழ்க்கையில் பெரியளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்குவதாக நம்பப்படுகிறது.
இந்த முறையான குரு பெயர்ச்சிகள் குறிப்பாக மிதுனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரப் போகின்றன.
அதன்படி , மிதுன ராசி: நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் குறித்த விருப்பங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். காதல் உறவுகளில் ஏற்பட்டிருந்த விரிசல்கள் நீங்கி, உறவுகள் மீண்டும் வலுவாகும்.
கடக ராசி: தொழில் வாழ்க்கையில் கணிசமான முன்னேற்றம் காணப்படும். நெடுங்காலமாக சுமந்து வந்த கடன் சுமைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க, சூழல் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த நேரம்.
சிம்ம ராசி: குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும். வெளிநாடுகளில் தொழில் அல்லது படிப்பு செய்ய விரும்புபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உணவு தொடர்பான தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடல் கடந்து படிக்க ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு இது பொற்காலமாக அமையும்.

