Wednesday, January 21, 2026 10:45 am
நாடளாவிய ரீதியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளதால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட இலங்கை மின்சாரசபை சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த, கடந்த வாரம் 8 காரணிகளை வலியுறுத்தி வலுசக்தி அமைச்சருக்கு எழுத்து மூல கோரிக்கையொன்றை கையளித்திருக்கின்றோம். ஆனால் அமைச்சரிடமிருந்து அதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. எம்முடன் கலந்தாலோசிக்காது ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம் என்றார்.

