கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு என்னிடம் வழக்கை ஒப்படைத்தார் என இஷாரா செவ்வந்தி பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு கமாண்டோ சலிந்துவுடன் நான் நீதிமன்றத்திற்கு வந்து வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வறையில் இருந்த போது அங்கு வந்த உதவியற்ற பெண் ஒருவர் வழக்கறிஞர் என நினைத்து என்னிடம் பேசினார்.
அந்தப் பெண்ணின் கணவர் அவளை மோசமாக அடித்த நிலையில் தனது வழக்கை எடுத்துக் கொள்வதற்கு ஆயிரம் ரூபா பெற்றுக் கொள்ளுமாறு கேட்டதாகவும் அங்கிருந்த இன்னுமொரு பெண் சட்டத்தரணியை காட்டி அவரிடம் செல்லுமாறு கூறி விட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் காட்டிய சட்டத்தரணி இரண்டாயிரம் ரூபா தருமாறு கோரிய நிலையில் அந்த ஏழைப் பெண்ணிற்கு ஐயாயிரம் ரூபா பணம் வழங்கினேன் என கணேமுல்ல சஞ்சீவ பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வாக்கு மூலம் அளித்துள்ளார்.