Tuesday, December 16, 2025 12:17 pm
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருவதால் , இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் தீர்வு கிடைக்காத தொடர்நிலையே நீடிக்கிறது .
போர் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால் , நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான போர் இதுவாகும். ரஷ்யாவிடம் உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்காது. தங்களது பாதுகாப்புக்கு மேற்கேத்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
மேலும் , இது உக்ரைனின் நிலைப்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிப்பதோடு , அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஒரு புதிய திருப்பமாகவும் காணப்படுகின்றது.

