Thursday, December 4, 2025 12:36 pm
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரருமான மோகித் சர்மா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு ஹரியானா அணிக்காக அறிமுகமாகிய இவர் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் அரங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் ,மோகித் சர்மா இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
எட்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடர்களில் சென்னை உள்ளிட்ட அணிகளுக்காக 120 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“இன்று, நிறைந்த இதயத்துடன் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்” எனக் கூறி தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

