Friday, January 2, 2026 1:11 pm
விளையாட்டு அமைச்சினால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உயரப் பாய்தல் மெத்தைகளின் தரம் மற்றும் அவற்றின் விலை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த பயிற்சியாளர் ‘பிரியந்த தந்திரிகே’ இன்று வெள்ளிக்கிழமை குருந்துவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட மெத்தைகள் தரமற்றவை எனவும், அவை சந்தை விலையை விட அதிக விலைக்குப் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். இது குறித்து அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் பிரியந்த தந்திரிகே ஊடகவியலாளர்களை விளையாட்டு மைதானத்திற்குள் அழைத்துச் சென்றார் என்பதே அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாகப் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரியந்த தந்திரிகே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவருக்கு அருகில் நின்றிருந்த மற்றொரு பயிற்சியாளரும் இன்று வாக்குமூலம் வழங்குவதற்காகப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குறித்த பயிற்சியாளர் ஊடகங்களுக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காத போதிலும் அதே குற்றச்சாட்டின் கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

