Tuesday, December 16, 2025 9:48 am
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக , 6ம் தரம் முதல் 10ம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் தாக்கம் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் , 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

