Wednesday, March 18, 2026 12:15 pm
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே மாணவர்கள் தமது முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளையும் விரைவாக வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

