Saturday, December 27, 2025 1:08 pm
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் மாசி மாதம் (February) முதலாம் திகதியன்று ஆரம்பிக்கப்படும் என பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளுக்கு மாறாக இந்த ஆண்டு வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக புதிய நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய , புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களினைக் கொண்ட ‘A’ மற்றும் ‘Aa’ பட்டியல்களைப் புதுப்பிப்பது தொடர்பாக மட்டுமே அதிகாரிகள் வீடுகளுக்கு வருகை தருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் முறைப்பாடுகளை செய்யாமல் வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கண்காணிக்கலாம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் , இது தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் இருக்குமாயின் அது தொடர்பான முறைப்பாடுகளை எழுத்து பூர்வமாக சமர்ப்பித்துக் கொள்ள முடியும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

