Monday, December 29, 2025 11:11 am
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு 25000 ரூபா உதவித்தொகை கிடைத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான 15000 ரூபா உதவித்தொகை தற்போது வழங்கப்படுவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் உதவிச் செயலாளர் ஜெயதிசி முனசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் , அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு குறித்த தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களுக்குரிய பிரதேச செயலகங்களைத் தொடர்பு கொண்டு இத் தொகையினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

