Tuesday, November 11, 2025 3:56 pm
யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டு அரங்கை நிர்மாணிப்பதற்கான, இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக 170மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளிலும், விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
அண்மைய காலங்களில் சர்வதேச ரீதியில் இலங்கை வீரர்கள், தமது சாதனையை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கவுள்ள உள்ளக விளையாட்டரங்கு திட்டம், யாழில் உள்ள சாதனையாளர்களுக்கு சிறந்த களமாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

