Friday, February 20, 2026 3:32 pm
அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் வர்த்தகத் தடைகளைக் குறைப்பதற்கான புதிய உடன்படிக்கை ஒன்றை எட்டியுள்ளன.
அமெரிக்க இறக்குமதி வரிகளை 32% இலிருந்து 19% ஆகக் குறைக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 99% க்கும் அதிகமான பொருட்களுக்கான வர்த்தகத் தடைகளை நீக்க இந்தோனேசியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் 30 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அமெரிக்கப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்தோனேசியா வழிவகை செய்யும்.
இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

