Monday, January 26, 2026 4:19 pm
இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காலை 08.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அங்கு மரியாதை அணிவகுப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவினது குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாசித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை கடற்படையினரின் இசைக்குழாமினரால் மூன்று மெல்லிசைப் பாடல்கள் இசைக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் வந்தே மாதரம் என்ற தலைப்பில் இரண்டு இந்திய பாரம்பரிய நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.

நிகழ்வில் கொழும்பில் வசிக்கும் இந்தியப் பிரஜைகள், உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


