Tuesday, March 24, 2026 2:44 pm
இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி நெல், மாப்பிள்ளை சம்பா நெல், கரு இழை நெல் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு இன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இவ்வாறு பயிரிடப்பட்டு நேற்று அறுவடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வயலில் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி உழப்பட்டு சிறுதானிய பயிரான பயறு விதைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ். இந்திய துணை தூதரகத்தால் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேற்குறித்த நெல்லினங்கள் முதல் தடவையாக இலங்கையில் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

