Tuesday, February 24, 2026 3:05 pm
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான முடிவுக்கு வரும் என இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், இஸ்ரேலும் தங்களின் பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிப்பதன் மூலம் தங்கள் பாதுகாப்பு கூட்டாண்மையை விரிவுப்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்பது ஆண்டுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

