Saturday, December 20, 2025 4:25 pm
2026ம் ஆண்டின் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியக் குழு இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும்.
அதன்படி சூர்யகுமார் யாதவ் உட்பட திலக் வர்மா , சஞ்சு சாம்சன் , அபிஷேக் ஷர்மா , ஹர்திக் பாண்டியா , வருண் சக்ரவர்த்தி , அர்ஷ்தீப்சிங் , ஷிவம் துபே , குல்தீப் யாதவ் , அக்ஷர் பட்டேல் , ரிங்கு சிங் , ஜஸ்பிரித் பும்ரா ,வொஷிங்டன் சுந்தர் இஷான் கிஷன் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இக் குழுவானது அஜீத் அகர்கர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் அணியிலிருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டு அக்ஷர் படேலுக்கு உப தலைமைத்துவப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


