Monday, November 10, 2025 9:28 am
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் கைது: கடற்படையினர் நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைதுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்களை படகுடன் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.
இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

