Friday, February 27, 2026 1:20 pm
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காசந்திர சிங் (Khachandra Singh), இன்று காலமானார்.
4ஆம் நிலை கல்லீரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
ஐசிசி 2026 டி20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இருந்த ரிங்கு சிங், தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் கிடைத்ததையடுத்து தனது குடும்பத்தினருடன் இருப்பதற்காக இந்த வார தொடக்கத்தில் அணியிலிருந்து வெளியேறினார்.
தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் மீண்டும் அணியில் இணைவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

