Friday, December 12, 2025 12:06 pm
எல்லைதாண்டும் இந்திய மீன்பிடியாளர்களின் இழுவைப் படகுகளை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தக்கோரி யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் முன்பாக போராட்டம் ஆரம்பமானது.

வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளப்படும் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கில் மீனவ அமைப்புள்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தபோதும், அரசு குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமையினால் தமது கடல் வளங்கள் அபகரிக்கப்படுவதாகவும், பொருளாதாரதம் முடக்கப்படுவதாகவும் தெரிவித்து இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமெனக் கோரி பாரிய போராட்டத்தை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்தனர்.


