Saturday, December 6, 2025 9:48 pm
இலங்கைத்தீவில் வீசிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மக்களை மீட்கும் நோக்கிலும், மீள் கட்டுமானங்களை துரிதப்படுத்தவும், இந்தியா தொடர்ந்தும் உதவி வழங்கி வருகிறது.
இந்தியாவின் 9 ஆவது நிவாரண விமானம் இன்று சனிக்கிழமை நண்பகல் கொழும்பை வந்தடைந்தது. இந்திய இராணுவ பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த 13 பொறியாளர்கள் இந்த விமானத்தில் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், 110 அடி நீளமும், 65 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட பெய்லி பாலம் (Bailey bridge) மற்றும் ஒரு ஜேசிபி பக்கோ இயந்திரம் (JCB backhoe loader) உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்குரிய இயந்திரங்கள் – பொருட்கள் இந்த விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவ பொறியியலாளர் பிரி்வு அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில், இந்திய பொறியியலாளர்களை வரவேற்றதுடன், பொருட்களையும் பெற்றுக் கொண்டனர்.

