Monday, January 5, 2026 11:02 am
இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜயம் செய்யவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இப் பயணத்தின் போது பயிற்சி ஒத்துழைப்பு, திறன் அபிவிருத்தி மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் இலங்கை இராணுவத் தளபதி உட்பட மேலும் சில உயர் அதிகாரிகளுடன் இரு நாடு நட்புறவை வளர்க்கும் வகையில் சந்தித்து கலந்துரையாட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இவரது வருகை இலங்கைக்கு ஆதரவாகவுள்ள இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கைக்கு பாரியளவு உதவியை இந்திய இராணுவம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

