Wednesday, November 26, 2025 12:08 pm
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு நாள் பயணமாக அவர் இலங்கைக்கு வருகைதர உள்ளார்.
இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவைக் சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள கடல்சார் நிகழ்வுகளுக்காக பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலைத்தீவு, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த எட்டு போர்க் கப்பல்கள் இந்த வாரம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளன.
இந்திய இராணுவத் தளபதியின் வருகையின் போது பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

