Monday, February 16, 2026 4:12 pm
பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் இந்தியா – பாகிஸ்தான் மோதலைக் காண ஏராளமான சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் 15 சிறப்பு தனியார் ஜெட் விமானங்களில் கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்.

பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் சிறப்பு விமானங்களில் பயணித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் தீவிரமான போட்டியாக பரவலாகக் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறிப்பிடத்தக்க சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
தனியார் ஜெட் விமானங்களின் வருகையை எளிதாக்குவதற்கும், வருகை தரும் ரசிகர்களுக்கு சுமூகமான குடியேற்றம் மற்றும் சுங்க அனுமதியை உறுதி செய்வதற்கும் விமான நிலைய அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

